சென்னை: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று (மார்ச் 22) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென் இந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் நிகழ்வு நடைபெறுகிறது.
இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (மார்ச் 22) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மார்ச் 23-ம் தேதி முதல் மார்ச் 25-ம் தேதி வரை 3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் புதன்கிழமை (மார்ச் 22) வானம் ஓரளவு மேகமூட் டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானமழை பெய்யக் கூடும். அதிகபட்சவெப்பநிலை 34 டிகிரி செல்சி யஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும்.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் திருவண்ணாமலை மாவட்டம் போளூர், விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தலா 7 செ.மீ., ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், திருவள்ளூர் மாவட் டம் கும்மிடிப்பூண்டியில் தலா 6 செ.மீ., திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம், புழல், மாதவரம், சேலம் மாவட்டம் டேனிஷ்பேட் டையில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.