விமானத்தில் இருக்கை மாறி உட்கார்ந்ததால் வந்த பிரச்சனை: பயணியை அடித்து இழுத்து சென்ற பொலிஸார்!


அவுஸ்திரேலியாவின் மெல்போனை சேர்ந்த ஒரு நபர் ஜெட்ஸ்டார் விமானத்தில் சட்ட விரோதமாக நடந்து கொண்டதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இருக்கை மாறி உட்காராததால் வந்த பிரச்சனை

அவுஸ்திரேலியாவின் மெல்போன் பகுதியை சேர்ந்த 30 வயதான போலிக் பெட் மாலூ என்ற  நபர் தனது மனைவி மற்றும் ஒரு வயது மகனோடு ஜெட்ஸ்டார் விமானத்தில் சென்றுள்ளார்.

அவர் தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமராமல் வேறொரு இருக்கையில் தனது மனைவியுடன் அமர்ந்துள்ளார். இதனை தொடர்ந்து அவருக்கு கொடுக்கப்பட்ட இருக்கையில் அமருமாறு விமானப் பணிப்பெண் அவரிடம் கூறியுள்ளார்.

ஆனால் போலில் ”நான் என் மனைவி மற்றும் மகனோடு உட்கார்ந்து கொண்டு வர விரும்புகிறேன். மேலும் நான் சீட் பெல்ட் போட்டு விட்டேன். என்னால் எழுந்திருக்க முடியாது” எனக் கூறியுள்ளார்.

விமானத்தில் இருக்கை மாறி உட்கார்ந்ததால் வந்த பிரச்சனை: பயணியை அடித்து இழுத்து சென்ற பொலிஸார்! | Jetstar Flight Speaks After He Was Dragged Flight@9news

உடனே அந்த விமானப் பணிப்பெண் எதுவும் பேசாமல் சென்று தனது மேலதிகாரிக்கு தகவல் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து மீண்டும் அவரை அங்கிருந்து மாறி அமரும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். ஆனால் போலில் மாறி உட்கார விரும்பவில்லை.

அடித்து இழுத்துச் சென்ற பொலிஸார்

இதனை தொடர்ந்து விமான நிர்வாக அதிகாரி மெல்போன் விமான நிலையத்திலிருந்த காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளது.

அங்கு வந்த காவல்துறையினர் அந்த நபரிடம் சீட்டிலிருந்து எழுந்திருக்க சொல்லியுள்ளனர்.

ஆனால் அவர் கேட்க மறுக்கவே உடனே பொலிஸார் அவரை அடித்து இழுத்துச் சென்றுள்ளனர்.

அவரை வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லும் போது  போலில் தனது மகனது பேரைச் சொல்லி கத்தியுள்ளார். இந்த காணொளி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

விமானத்தில் இருக்கை மாறி உட்கார்ந்ததால் வந்த பிரச்சனை: பயணியை அடித்து இழுத்து சென்ற பொலிஸார்! | Jetstar Flight Speaks After He Was Dragged Flight@9news

மெல்போன் காவல் துறை பொது வெளியில் அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட நெறிமுறைக்கு உட்பட்டு நடக்காமல் இருந்ததற்காகவும், பொதுமக்களுக்கு இடையூறு செய்ததற்காகவும் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.

விமானத்தில் இருக்கை மாறி உட்கார்ந்ததால் வந்த பிரச்சனை: பயணியை அடித்து இழுத்து சென்ற பொலிஸார்! | Jetstar Flight Speaks After He Was Dragged Flight@Today

இந்த நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போலில்

“காவல் துறை என்னை மோசமாக தாக்கியது, மேலும் என்னை கேலி செய்து இழுத்துச் சென்றது, நான் எனது மகன் முன்னால் மிகவும் அவமானத்துக்குள்ளாகப் பட்டேன்” என கூறியுள்ளார்.

இச்சம்பவத்திற்கு AFP காவல்துறை அதிகாரிகள்

“விமானத்தில் பயணிக்கும் போது பொது மக்களுக்கு இடையூறு செய்வது போல நடந்து கொள்வது, பயணம் மட்டுமில்லாது பயணிகளையும் பெரிதும் பாதிக்கிறது. விமான ஊழியர்கள் தரும் விதிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டியது அவசியம்” என கருத்து தெரிவித்துள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.