சமீபத்தில் துருக்கி மற்றும் சிரியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் மரணமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியா நாடுகள் உருக்குலைந்து போயுள்ளனர். கான்கிரீட் குவியல்களை சரி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதனால் பெரும் பொருளாதார நெருக்கடியையும் அந்த நாடுகள் சந்தித்துள்ளன. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து இந்தோனேஷியா, நியூஸிலாந்து, பிலிப்பைன்ஸ், ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளும் அடிக்கடி நில நடுக்கத்தை உணர்ந்து வருகின்றன.
Ajith: நன்றியே இல்லாத ஆள் அஜித்… பிரபல நடிகர் ஆவேசம்!
அந்த வகையில் நேற்று ஆஃப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் மலைப் பகுதியில் நேற்று இரவு 10 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவானது. பைசாபாத்திலிருந்து தெற்கு, தென்கிழக்கே 156 கிலோ மீட்டர் தூரத்தில், 184 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நலடுக்கம் ஏற்பட்டது.
இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. தலைநகர் டெல்லி, பஞ்சாப், காஷ்மீர், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் கட்டடங்கள் குலுங்கின. வீட்டில் இருந்து பொருட்கள் அனைத்தும் உருண்டதால் மக்கள் அலறிடியத்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
Aishwarya Rajinikanth: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருடிய நகைகளை வைத்து ரூ. 1 கோடிக்கு சொகுசு வீடு.. விசாரணையில் அதிர்ச்சி!
இந்நிலையில் டெல்லியில் உள்ள நடிகை குஷ்பு தானும் நில நடுக்கத்தை உணர்ந்ததாக டிவிட்டியுள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் டெல்லி முழுவதும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். சுமார் 4 நிமிடம் வரை அந்த நில நடுக்கம் நீடித்ததாகவும் இதனால் ஃபேன்கள் மற்றும் லைட்டுகள் அசைந்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும் சோஃபாக்கள் அடியிலிருந்து சத்தம் கேட்டதாகவும் இதனையடுத்து உடனடியாக வீட்டை விட்டு வெளியேறிதாகவும் தெரிவித்துள்ளார் நடிகை குஷ்பு தனது டிவிட்டில் தெரிவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பாதுகாப்பாக இருங்கள் மேடம் என பதில் அளித்து வருகின்றனர். தீவிர அரசியலில் உள்ள குஷ்பு பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருந்து வந்தார்.
Jeevitha: நாங்க எப்போ வேணாலும் ரூம்முக்கு வருவோம்.. அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்ட இயக்குநர்.. பிரபல நடிகை திடுக்!
கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டார. இந்லையில் நடிகை குஷ்பு சமீபத்தில்தான் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பதவியேற்றார். அதன் பிறகு டெல்லியில் தங்கி வரும் குஷ்பு நேற்று ஏற்பட்ட நில நடுக்கத்தை உணர்ந்துள்ளார்.