வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: இன்டர்நெட் வசதியை நகர்ப்புறங்களை விட, கிராமப்புறத்தில் அதிகம் பேர் உபயோகப்படுத்துகின்றனர் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
டில்லியில் புதிய சர்வதேச தொலைத்தொடர்பு அலுவலகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து பேசியதாவது: இந்தியா கடந்த 120 நாட்களில் 125க்கும் மேற்பட்ட நகரங்களில் 5 ஜி சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில் 100 இடங்களில் 5ஜி சேவையை கண்காணிப்பதற்கு ஆய்வகங்கள் அமைக்கப்படும்.
இன்டர்நெட் வசதியை நகர்ப்புறங்களை விட கிராமப்புறத்தில் அதிக பேர் உபயோகப்படுத்துக்கின்றனர். இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் 800 கோடிக்கும் அதிகமாக, யுபிஐ அடிப்படையிலான ஆன்லைன் பணம் பரிவர்த்தனை நடக்கிறது. நாங்கள் 6ஜி தொழில்நுட்பத்தைப் பற்றி பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement