கோலிவுட்டின் திறமையான நடிகர்களில் ஒருவர் தனுஷ். மேலும் தமிழ் திரையுலகின் மிகவும் பிசியான நடிகர்களிலும் அவர் ஒருவர்.
தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். ப்ரியங்கா அருள்மோகன் அவருக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அந்த படம் முடிந்ததும் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.
சேகர் கம்முலா படத்திற்கு ஏற்கனவே பூஜை போட்டு ப்ரீ ப்ரொடக்ஷன் வேலையை துவங்கிவிட்டார்கள். தனுஷ்-சேகர் கம்முலா கூட்டணியில் உருவாகவிருக்கும் படத்தை மூன்று மொழிகளில் ரிலீஸ் செய்யவிருக்கிறார்கள்.
வெங்கி அட்லூரியை அடுத்து மீண்டும் தெலுங்கு இயக்குநருடன் கை கோர்த்திருக்கிறார் தனுஷ். இது தவிர்த்து மேலும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.
தன்னுடைய 50வது படத்தை தானே இயக்கி, நடிக்க முடிவு செய்துள்ளார் தனுஷ். டி50 என்று அழைக்கப்படும் அந்த படத்தில் தனுஷ் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா, விஷ்ணு விஷால் நடிக்கவிருக்கிறார்கள்.
Dhanush: அதிரடி முடிவு எடுத்த தனுஷ்: அதுக்கு ஐஸ்வர்யா ஒத்துக்குவாரா?
இது தவிர்த்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் மீண்டும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் தனுஷ். முன்னதாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் நடித்தார். அந்த படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது.
மாரி செல்வராஜ் படத்தில் நடிப்பதுடன் தயாரிக்கவும் போகிறாராம். இப்படி கை நிறைய படங்கள் வைத்திருக்கும் தனுஷ் மேலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
கட்டா குஸ்தி படம் மூலம் பிரபலமான செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிக்கப் போகிறாராம். அந்த படத்தை அன்புச் செழியன் தயாரிக்கவிருக்கிறாராம்.
செல்லா அய்யாயுவா, தனுஷை புரிந்துகொள்ளவே முடியவில்லையே. இந்த கூட்டணியை நாங்கள் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள் ரசிகர்கள்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிந்து வாழ்வதால் அதை பற்றி நினைத்து கவலைப்படாமல் இருக்க இப்படி அதிக படங்களில் கமிட்டாகிக் கொண்டிருக்கிறாரா தனுஷ் என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
முன்னதாக ஜஸ்வர்யாவுடன் பிரச்சனை ஏற்பட்டபோது எல்லாம் புதுப்படங்களில் நடிக்க ஒப்பந்தமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே தனுஷுக்கும், மீனாவுக்கும் திருமணம் நடக்கப் போகிறது என நடிகரும், மூத்த பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் தெரிவித்தார். இருவரின் பாடி டிமான்ட் பற்றி பேசினார். அதை பார்த்த தனுஷ் மற்றும் மீனாவின் ரசிகர்கள் கொந்தளித்துவிட்டார்கள்.
Dhanush:பாடி டிமான்டை தவிர உங்களுக்கு வேறு எதுவும் தெரியாதா?: பயில்வானை விளாசும் தனுஷ், மீனா ரசிகர்கள்
பாடி டிமான்டை விட்டால் உங்களுக்கு வேறு எதுவுமே தெரியாதா என பயில்வான் ரங்கநாதனை விளாசினார்கள். துணையை பிரிந்து வாழ்ந்தால் உடனே அவர்களின் பாடி டிமான்ட் பற்றி பேசுவது தவறு என ரசிகர்கள் திட்டித் தீர்த்தார்கள்.
இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு தனுஷ் ரசிகர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். ஐஸ்வர்யா தன் விலை உயர்ந்த நகைகள் இருந்த லாக்கரை கடந்த 4 ஆண்டுகளாக திறந்து பார்க்காமல் இருந்திருக்கிறார். அண்மையில் திறந்து பார்த்தபோது பல நகைகளை காணவில்லை.
Aishwarya Rajinikanth: இது டூ மச், என்னம்மா ஐஸ்வர்யா இப்படி பண்ணியிருக்கீங்களேமா: ரஜினி, தனுஷ் ரசிகர்கள்
இதையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஐஸ்வர்யா வீட்டில் வேலை செய்த ஈஸ்வரி எனும் பணிப்பெண்ணை கைது செய்துள்ளனர் போலீசார். ஐஸ்வர்யாவிடம் திருடிய நகைகளை வைத்து ரூ. 1 கோடிக்கு வீடு வாங்கியிருக்கிறார் ஈஸ்வரி.
இதையடுத்தே அவ்வப்போது லாக்கரை திறந்து பார்க்குமாறு தனுஷ் ரசிகர்கள் ஐஸ்வர்யாவிடம் தெரிவித்துள்ளனர்.