பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் அவர்கள் ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டே பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்திற்கு நேற்று (21) விஜயம் மேற்கொண்டார்.
இதன்போது, தாய் நாட்டிற்காக இலங்கை இராணுவ வீரர்கள் ஆற்றிய அர்ப்பணிப்புடனான சேவைகளையும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பாராட்டினார்.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் இலங்கை இராணுவ தலைமையகத்திற்கு நேற்று தனது முதல் விஜயத்தை மேற்கொண்டிருந்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேற்படி விஜயத்தின் போது தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க அவர்களும் கலந்து கொண்டார்.
இராணுவ தலைமையகத்திற்கு வருகை தந்த உயர் அதிகாரிகள் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களினால் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து இராணுவத் தலைமையகத்தில் பணியாற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் இராணுவ வீரர்களுடன் சுமூகமான கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்த விஜயத்தை நினைவுகூரும் வகையில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி ஆகியோருக்கு லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களினால் நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் இராணுவ பிரதம அதிகாரி உட்பட சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் இராணுவ வீரர்களும் கலந்துகொண்டுள்ளனர்.