வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: டில்லியில் உள்ள பிரிட்டன் தூதரகத்திற்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை மத்திய அரசு இன்று(மார்ச் 22) குறைந்துள்ளது. லண்டனில் இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதிற்கு, உரிய பாதுகாப்பு தராததால் மத்திய அரசு, இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
சில தினங்களுக்கு முன், லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர். சிலர் தேசிய கொடியை கீழே இறக்கி அவமதிப்பு செய்தனர்.
லண்டனில் நடைபெற்ற இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் மத்திய அரசு புதுடில்லியில் உள்ள லண்டன் தூதரக அதிகாரிகளை அழைத்து தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்தது. மேலும் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யவும் வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில், டில்லியில் பிரிட்டன் தூதரகத்திற்கு வழங்கப்பட்ட பாதுகாப்புகளை மத்திய அரசு திடீரென்று இன்று (மார்ச் 22) வாபஸ் பெற்றது. அதன் படி, டில்லியில் உள்ள பிரிட்டன் தூதரகம் மற்றும் தூதர் இல்லம் முன் போடப்பட்டிருந்த பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் தாக்குதல் நடத்தியதிற்கு, உரிய பாதுகாப்பு தராததால் மத்திய அரசு, இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
போலீஸ் அதிகாரி கூறுகையில், புதுடில்லியில் உள்ள லண்டன் தூதர் அலுவலகம் முன்பு போடப்பட்ட பாதுகாப்பு தடுப்புகள் மட்டும் அகற்றப்பட்டுள்ளது. மக்கள் செல்லும் பாதையில் இடையூறுகளாக இருந்த தடுப்புகள் மட்டும் அகற்றப்பட்டுள்ளன எனக் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement