சின்னத்திரையில் ஒளிப்பரப்பாகும் நகைச்சுவை நிகழ்ச்சிகளுக்கு என்று தனியொரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் கலைஞர்களும் பிரபலமாவது வழக்கம். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‘கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் மிமிக்ரி கலைஞரான கோவை குணா.
இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேஷன், ஜனகராஜ், கவுண்மணி உள்ளிட்ட பிரபல நடிகர்களை போல் மிமிக்ரி செய்யக்கூடியவர். குறிப்பாக நடிகவேள் எஸ்.ஆர். ராதாவை போன்று அச்சு அசலாக பேசக்கூடியவர் குணா. சன் டிவியில் ஒளிப்பரப்பான ‘அசத்தப்போவது யாரு’ நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இந்நிலையில் கடந்த சில காலமாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோவை குணா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரின் திடீர் மறைவு ரசிகர்கள் மத்தியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கோவை குணா குறித்து நடிகர் மதன் பாப் அளித்துள்ள பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.
கோவை குணா கலந்து கொண்ட அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக இருந்த மதன் பாப் தற்போது அளித்துள்ள பேட்டியில், அவரை ஆரம்பத்தில் இருந்தே தெரியும். கோட் சூட்டில் அற்புதமாக பெஃர்பாம் பண்ணுவார். நான் அந்த நிகழ்ச்சியை தயாரித்த போதும், கோவை குணா தான் நம்பர் ஒன் டேலண்ட். கவுண்டமணியை போல் இப்போது பலர் நடித்தாலும், அப்போது அவரை அற்புதமாக பிரதிபலித்தார் குணா.
Leo: ‘லியோ’ படப்பிடிப்பில் நிலநடுக்கம்.. தளபதி எப்படி இருக்கார்.?: பதறிய ரசிகர்கள்.!
மிமிக்ரி மட்டும் இல்லாம சொந்தமாகவே நகைச்சுவை செய்வது. கத்பாத்திரங்களை அப்படியே பெர்பார்ம் பண்ணுவது என கலக்கினார். என்னுடைய நண்பர் எடுத்த படத்தில் குணாவை நடிக்க பரிந்துரைத்தேன். இவருடைய நடிப்பு பிடித்து போய் நல்ல சம்பளம் கொடுத்தனர். ஆனால் நான் சொல்வது ஒன்றே ஒன்றுதான். கெட்ட பழக்க வழக்கமெல்லாம் அளவோடு இருக்க வேண்டும். எவ்வளவு பெரிய கடலாக இருந்தாலும் படகு செல்லும்.
ஆனால் படகுகள் தண்ணீர் புகுந்தால் ஒன்றுமே செய்ய முடியாது. அளவுக்கு மீறி கெட்ட பழக்கம் இருந்தாலும் அப்படித்தான். இந்த நேரத்தில் இதை பேசக்கூடாது தான். ஆனாலும் திரையுலகில் இதே போல் பலர் காலமாவது வருத்தமாக உள்ளது. கோவை குணா ஆத்மா சந்தியடையுட்டும். இவ்வாறு உருக்கமாக பேசியுள்ளார் மதன் பாப். அவரின் இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.
STR 48: போடு வெடிய.. சிம்புவுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை: ‘எஸ் டி ஆர் 48’ படத்தின் தாறுமாறு அப்டேட்.!