இஸ்லாமாபாத்,
ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் மலைத்தொடரை மையமாகக் கொண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவாகி இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கத்தின் மையம் தரைமட்டத்தில் இருந்து சுமார் 184 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், பாகிஸ்தானில் இஸ்லாமாபாத், லாகூர் உள்ளிட்ட பகுதிகளில் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்தனர். ஆறு பேர் காயமடைந்தனர். இந்து குஷ் மலைத்தொடரை மையமாகக் கொண்டு சக்திவாய்ந்த ஏற்பட்ட நிலநடுக்கம் பாகிஸ்தானின் சில பகுதிகளை உலுக்கி உள்ளதாக பாகிஸ்தான் புவியியல் துறை தெரிவித்துள்ளது.