தமிழ் சினிமாவையும் தாண்டி அட்லீ தற்போது பாலிவுட் வரை சென்று பிரபலமான இயக்குனராக வலம் வருகின்றார். என்னதான் இவர் ஒரு இயக்குனராக முன்னேறி வந்தாலும் இவரின் மீது கடுமையான விமர்சனங்களும் ஒரு பக்கம் வந்துகொண்டே தான் இருக்கின்றது.
இவரின் படங்கள் காப்பி என்றும், தயாரிப்பாளருக்கு தேவையில்லாத செலவை இழுத்து விடுவார் என்றும் அட்லீயின் மீது அடுக்கடுக்கான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. ஆனாலும் இதைப்பற்றியெல்லாம் கண்டுகொள்ளாது அட்லீ தன் வேலைகளில் பிசியாக இருந்து வருகின்றார். தற்போது ஷாருக்கானின் ஜவான் படத்தை இயக்கி வரும் அட்லீ அடுத்ததாக தளபதி விஜய்யின் 68 ஆவது படத்தையும் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது
Leo: லியோ படத்தில் நடிக்க கமல் போட்ட கண்டிஷன்..ஓகே சொல்வாரா விஜய் ? பதட்டத்தில் லோகேஷ்..!
இந்நிலையில் ஜவான் படத்தின் படப்பிடிப்பின் போது அட்லீ செலவை இழுத்து விடுகின்றார் என ஷாருக்கான் அவரை கண்டித்ததாக பல செய்திகள் வலம் வந்தன. ஆனால் இதையெல்லாம் உண்மைதானா இல்லை வெறும் வதந்தியா என்பது பற்றி தெரியவில்லை.
இதைத்தொடர்ந்து தற்போது பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் அட்லீயை கடுமையாக விமர்சித்துள்ளார். அதாவது பாலிவுட்டில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான சிறப்பான திரைப்படம் தான் சக் தே இந்தியா. இப்படத்தின் காப்பி தான் அட்லீ இயக்கத்தில் வெளியான பிகில். அதில் ஹாக்கி விளையாட்டு என்றால் பிகிலில் கால்பந்து அவ்வளவுதான் வித்யாசம்.
மற்றபடி கதையெல்லாம் ஒன்றுதான். இப்படத்தை எடுத்துவிட்டு தயாரிப்பாளரை கால்பந்து மாதிரி அட்லீ உதைத்து தள்ளிவிட்டார். நல்லவேளை AGS பெரிய நிறுவனம் என்பதால் தப்பித்துக்கொண்டது என கடுமையாக விமர்சித்துள்ளார் கே.ராஜன்.
இந்நிலையில் இதே மேடையில் இருந்த நடிகர் மிர்ச்சி சிவா கே.ராஜன் பேசுகையில் சிரித்துக்கொண்டிருந்தார். அவர் நடிப்பில் வெளியாகியிருக்கும் காசேதான் கடவுளடா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தான் கே.ராஜன் இவ்வாறு பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.