சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மேலும் 4 புதிய நீதிபதிகள் நியமிக்க மத்தியஅரசுக்கு கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட நீதிபதிகள் 4 பேரை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக்க பரிந்துரைத்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகளில் இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்ககோரி வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதைத்தொடர்ந்து, அவ்வப்போது, சில நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலிஜியம் பரிந்துரை செய்து வருகிறது. அதன்படி நீதிபதிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். சென்னை […]