அமெரிக்கா-தென் கொரியாவின் பிரம்மாண்ட துப்பாக்கிச் சூடு பயிற்சி: கொரிய தீபகற்பத்தில் அதிகரிக்கும் பதற்றம்


கொரிய தீபகற்பத்தில் அதிகரித்து வரும் வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளுக்கு மத்தியில் தென் கொரியா மற்றும் அமெரிக்கா இடையே மிகப்பெரிய துப்பாக்கி சூடு பயிற்சி திட்டமிடப்பட்டுள்ளது.

வட கொரியாவால் பதற்றம்

அமெரிக்கா மற்றும் தென் கொரியப் படைகளால் சமீபத்திய வாரங்களில் நடத்தப்பட்ட வான் மற்றும் கடல் வழி போர் பயிற்சிகள் வட கொரியாவை பெரும் அளவு சீண்டியுள்ளது.

இந்த போர் பயிற்சிகளுக்கு ஆவேசமாக பதிலளித்த வட கொரியா, இதனை படையெடுப்பிற்கான ஒத்திகை என்று குற்றம் சாட்டியது.

அமெரிக்கா-தென் கொரியாவின் பிரம்மாண்ட துப்பாக்கிச் சூடு பயிற்சி: கொரிய தீபகற்பத்தில் அதிகரிக்கும் பதற்றம் | South Korea Us Hold Largest Live Fire DrillsReuters

அத்துடன் வட கொரியா தனது ராணுவ சோதனைகளை அதிகரித்துடன், கடந்த வாரம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மற்றும் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவிற்கு எதிரான அணுசக்தி எதிர் தாக்குதல் ஆகியவற்றை முன்னிறுத்தியது.

மிகப்பெரிய போர் பயிற்சி

இந்நிலையில், அமெரிக்கா மற்றும் தென் கொரியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான ராணுவ கூட்டணியின் 70 வது ஆண்டு நிறைவை குறிக்கும் பகுதியாக ஜூன் மாதம் மிகப்பெரிய நேரடி துப்பாக்கிச் சூடு பயிற்சியை நடத்தவுள்ளதாக தென்கொரியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா-தென் கொரியாவின் பிரம்மாண்ட துப்பாக்கிச் சூடு பயிற்சி: கொரிய தீபகற்பத்தில் அதிகரிக்கும் பதற்றம் | South Korea Us Hold Largest Live Fire DrillsReuters

இது தொடர்பாக வெளியான அறிக்கையில், வடகொரியாவின் வளர்ந்து வரும் அணுசக்தி மற்றும் ஏவுகணை அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தங்களது மூலோபாய தடுப்பு திறன்கள் மற்றும் திடமான ஒருங்கிணைந்த பாதுகாப்பு நிலைப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில், ”ராணுவ பலத்தை கொண்டு அமைதியை செயல்படுத்தும் கூட்டு  ராணுவ பயிற்சிக்கு நாங்கள் திட்டமிட்டுள்ளோம்” என தெரிவித்துள்ளது.

இந்த பயிற்சியில் ஒருங்கிணைந்த படைகள் வரலாற்றில் இல்லாத அளவில் கூட்டணியின் வல்லமைமிக்க ஃபயர் பவர் மற்றும் இயக்கம் ஆகியவை பரிசோதித்து பார்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்கா-தென் கொரியாவின் பிரம்மாண்ட துப்பாக்கிச் சூடு பயிற்சி: கொரிய தீபகற்பத்தில் அதிகரிக்கும் பதற்றம் | South Korea Us Hold Largest Live Fire DrillsReuters



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.