குருவிமலை பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, நிவாரணம் வழங்கியும் உத்தரவிட்டுள்ளார்.
காஞ்சிபுரத்தை அடுத்த வளதோட்டம் பகுதியில் செயல்பட்ட தனியாருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை குடோனில், இன்று பிற்பகலில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் பலியானார்கள்.
மேலும் இந்த வெடி விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தொழிலாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், காஞ்சிபுரம் அருகே குருவிமலை தனியார் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு பிரதமர் மோடி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழப்புக்கு இரங்கலை தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.