ரஷ்ய ஜனாதிபதி புடினின் விமர்சனத்தை தொடர்ந்து உக்ரைன் போரில் அணு சக்தி விரிவாக்கம் இல்லை என்று பிரித்தானிய வெளியுறவு செயலாளர் James Cleverly வலியுறுத்தியுள்ளார்.
உக்ரைனுக்கு வெடிமருந்து உதவி
போரில் ரஷ்யாவை எதிர்த்து சண்டையிட உக்ரைனுக்கு குறைந்த யுரேனியம் அடங்கிய வெடிமருந்துகள் உதவி தொகுப்பை பிரித்தானிய அறிவித்து இருந்தது.
இந்நிலையில் இதற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கண்டனம் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், பிரித்தானியா உக்ரைனுக்கு யுரேனியம் கலந்த குண்டுகள் உட்பட ஆயுதங்களைக் கொடுக்குமானால், பிரித்தானியாவுக்கு பதிலடி கொடுக்கும் நிலைக்கு ரஷ்யா தள்ளப்படும் என்று எச்சரித்துள்ளார்.
பிரித்தானியா வழங்கிய வெடிமருந்துகள் ரஷ்யாவின் டாங்கிகள் மற்றும் கவசங்களை எளிதாக ஊடுருவி செல்வதாக ரஷ்யா குற்றச்சாட்டு தெரிவித்து வருகிறது.
அணுசக்தி அதிகரிப்பு இல்லை
இந்நிலையில் உக்ரைன் போரில் அணு சக்தி விரிவாக்கம் எதுவும் செய்யப்படவில்லை என பிரித்தானிய வெளியுறவு செயலாளர் James Cleverly விளக்கியுள்ளார்.
உலகில் அணுசக்தி விவகாரங்களைப் பற்றி பேசும் ஒரே நாடு ரஷ்யா மட்டுமே.
உக்ரைனுக்கு பிரித்தானியா வழங்கிய உதவி தொகுப்பால் ரஷ்யாவிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை, இது முற்றிலும் உக்ரைன் தன்னைத் தற்காத்துக் கொள்ள உதவுவதாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.