வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: ‘உலகின் மிக முக்கியமான வெளிநாட்டு அரசியல் கட்சியாக பா.ஜ., விளங்குகிறது என, அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இருந்து வெளியாகும், ‘வால்ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிகையில், வால்டர் ருசல் மியட் என்பவர் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில், சீனாவின் சவால்களை எதிர்கொள்ள, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் அமெரிக்காவின் நம்பிக்கையை பெற்றவையாக உள்ளன. அமெரிக்கர்களின் நலனுக்காக, இந்தியாவுடன் நெருக்கமாக இருப்பது அவசியமாகும்.
இந்தியாவில், 2014 மற்றும் 2019 லோக்சபா தேர்தலில் மிகப் பெரும் வெற்றியை பெற்றுள்ள பா.ஜ., அடுத்தாண்டு நடக்க உள்ள தேர்தலிலும் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில், உலகின் மிக முக்கியத்துவம் வாய்ந்த வெளிநாட்டு அரசியல் கட்சியாக பா.ஜ., உள்ளது. ஆனால், அந்தக் கட்சி குறித்தும், அதன் கொள்கைகள் குறித்தும், வெளிநாடுகளில் உள்ளவர்கள், குறிப்பாக இந்தியர் அல்லாதோர் சரியாக புரிந்து கொள்ளவில்லை. இந்தியாவின் கலாசாரத்துடன் இணைந்ததாக உள்ளதால், அந்தக் கட்சி குறித்த தவறான புரிதல்களும் உள்ளன.பா.ஜ., தேசியவாதத்தை அடிப்படையாக வைத்து, ஹிந்துத்துவா மற்றும் நவீனமயம் இரண்டையும் கலந்ததாக உள்ளது. இதுவே, அக்கட்சியின் தேர்தல் வெற்றிகள் வெளிப்படுத்துகின்றன இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement