வாஷிங்டன்:இந்தியப் பயணத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோரிடம் இருந்து பெற்ற பரிசுப் பொருட்களை, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கணக்கில் காட்டாதது தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவின் குடியரசு கட்சியை டொனால்டு டிரம்ப், 2017 – 2021 வரை அமெரிக்காவின் 45வது அதிபராக பதவி வகித்தார்.
இந்தக் காலத்தில், இந்தியா உட்பட பல்வேறு வெளிநாடுகளுக்கு, அரசு முறை பயணம் மேற்கொண்ட டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப், பல்வேறு பரிசுப் பொருட்களை பெற்றனர்.
இந்நிலையில் வெளிநாட்டு பயணங்களின் போது, உலகத் தலைவர்கள் அளித்த, நூற்றுக்கும் மேற்பட்ட பரிசுப் பொருட்களை, முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் கணக்கில் காட்டாதது, ஜனநாயக காங்கிரஸ் கமிட்டி நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
கணக்கில் காட்டப்படாத பரிசுப் பொருட்களின் மதிப்பு, இந்திய ரூபாய் மதிப்பில் இரண்டு கோடியே ஏழு லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுஉள்ளது.
இதில், இந்தியாவில் இருந்து பெறப்பட்ட 17 பரிசுப் பொருட்களின் மதிப்பு 39 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது.
இந்த பரிசுகளில், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் அளித்த ஏழு லட்சம் ரூபாய் மதிப்புள்ள குவளை; 3 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள தாஜ்மஹால் மாடல், முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அளித்த, 5 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இந்திய விரிப்பு, பிரதமர் மோடி அளித்த ஒரு லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கப்லிங்க்ஸ் ஆகியவை அடங்கும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement