திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆலங்காயம் அருகே உள்ள வெள்ளக்குட்டை கிராமத்தில் ஏ.டி.எம். மையம் ஒன்று உள்ளது. இந்த மையத்தில் மர்ம நபர்கள் உள்ளே புகுந்து ஏ.டி.எம் எந்திரத்தை கடப்பாரையால் உடைத்துள்ளனர். அப்போது அங்கு பொதுமக்கள் நடமாட்டம் இருந்ததால், கொள்ளை கும்பல் அங்கிருந்து தப்பித்த்துச் சென்றனர்.
ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அந்த தகவல் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து கைரேகைகளை சேகரித்துள்ளனர்.
தன் பின்னர் அந்த பகுதியில், உள்ள கண்காணிப்புக் கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கிடையே சம்பவ இடத்திற்கு ஏ.டி.எம். அதிகாரி ஒருவர் வந்து ஆய்வு செய்து, ஏ.டி.எம்மில் 4½ லட்சம் பணம் வைக்கப்பட்டிருந்ததாகவும் வாடிக்கையாளர்கள் எடுத்தது போக தற்போது ரூ.3½ லட்சம் மீதி இருப்பதாகவும் தெரிவித்தார்.
மர்ம நபர்களால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முடியாததால் ரூ.3½ லட்சம் பணம் தப்பியது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு முன்னதாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த மாதம் 4 ஏ.டி.எம். மையங்களில் ரூ.73 லட்சம் கொள்ளை போனது தமிழகத்தில் பெரும் பரபரப்பி ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் அடங்குவதற்குள் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.