சேலம்: சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே வெள்ளாளபுரம், முனியம்பட்டி சன்னியாசிகடையைச் சேர்ந்தவர் குமார் (40). இவர் சொந்தமான பட்டாசு ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு பணியாற்றி கொண்டிருந்த அமுதா (45) பரிதாபமாக உயிரிழந்தார். வேடப்பன் (75) படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.