மகனை தொடர்ந்து அப்பாவை இயக்கும் மாரி செல்வராஜ்
இயக்குனர் மாரி செல்வராஜ் தற்போது மாமன்னன் படத்தின் டப்பிங் பணிகளில் பிஸியாக உள்ளார். இதை தொடர்ந்து வாழை எனும் படத்தையும் இயக்கி முடித்துள்ளார். மாமன்னன் படத்திற்கு பின் இந்தப்படம் வெளியாக உள்ளது.
இதையடுத்து 2 வருடத்திற்கு முன்பு அறிவித்த துருவ் விக்ரம் படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்கவுள்ளார். இந்த படத்திற்காக தீவிர கபடி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் துருவ்.
இந்நிலையில் சமீபத்தில் நடிகர் விக்ரமை சந்தித்து கதை கூறியுள்ளார் மாரி செல்வராஜ். இக்கதையில் விக்ரம் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. துருவ் விக்ரம் படத்திற்கு பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என கூறப்படுகிறது.