குழந்தையை கொன்று தாய் தற்கொலை

வேலூர்: வேலூர் அடுத்த பென்னாத்தூரை சேர்ந்தவர் மணிவண்ணன்(30). காட்பாடியில் உள்ள தனியார் கார் ஷோரூமில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சந்தியா(27). 2 வயதில் கீர்த்திகா என்ற குழந்தை உள்ளது. 3 மாதமாக மணிவண்ணன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதுதொடர்பாக கடந்த 5 நாட்களாக தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை மீண்டும்  தகராறு ஏற்பட்டு முற்றியது. இதனால் கோபமடைந்த மணிவண்ணன் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். பின்னர் மாலை 5 மணியளவில் திரும்பி வந்தபோது கதவு உட்புறமாக பூட்டி இருந்தது. வெகுநேரம் தட்டியும் திறக்காததால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சந்தியா, 2 வயது குழந்தை கீர்த்திகாவை துணியால் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு, அதே துணியில் தூக்கு போட்டு பிணமாக தொங்கியது  தெரியவந்தது. இது குறித்து வேலூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.