புதுடில்லி, :ராணுவ வீரர்களுக்கான, ‘ரேஷனில்’ சிறுதானிய மாவு மீண்டும் அறிமுகம் செய்யப்படுகிறது.
ராணுவ வீரர்களுக்கான ரேஷனில், அவர்களுக்கு குறைந்த விலையில் பல பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்தாண்டை, சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐ.நா., அறிவித்துள்ளது.
இதையடுத்து, ராணுவ வீரர்களுக்கான ரேஷனில், சிறுதானிய மாவு வழங்குவது மீண்டும் துவங்கப்பட உள்ளது.
ராணுவ வீரர்களுக்கு முன்பு சிறுதானிய மாவு வழங்கப்பட்டு வந்தது. ஆனால், ௫௦ ஆண்டுகளாக, அதற்கு பதிலாக கோதுமை மாவு வழங்கப்படுகிறது. சிறுதானிய பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், சிறுதானிய மாவு வழங்க ராணுவம் முடிவு செய்துஉள்ளது.
இதைத் தவிர, சிறுதானியம் தொடர்பாக பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கும் ராணுவம் ஏற்பாடு செய்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement