சிறையில் இருப்பவர்கள் அனைவரும் குற்றவாளிகள் அல்ல; குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்று மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கிளை சிறைச்சாலையில் சிறைவாசிகளுக்கு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர், சிறையில் இருப்பவர்களை நாங்கள் என்றைக்குமே குற்றவாளிகளாக பார்ப்பதில்லை என்றும் நீங்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்றும் கூறினார். நாங்கள் தீர்ப்பு கொடுத்த பிறகு தான் குற்றவாளியாக மாறுகிறீர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.