அவுஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதல் பந்திலேயே அவுட் ஆனதால், சூர்யகுமார் யாதவ் படுமோசமான சாதனையை செய்தார்.
அவுஸ்திரேலியா வெற்றி
இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.
இந்தப் போட்டியில் 6வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார்.
@Pankaj Nangia/Getty Images
ஆனால் அவர் முதல் பந்திலேயே போல்டானார்.
ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளிலும் அவர் முதல் பந்தில் ஆட்டமிழந்திருந்தார். இதன்மூலம் அவர் மோசமான சாதனையை படைத்தார்.
மோசமான சாதனை
அதாவது, ஒருநாள் போட்டியில் ஹாட்ரிக் முறை கோல்டன் டக் ஆன 6வது இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் ஆவார்.
இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர், அனில் கும்ப்ளே, ஜாகீர்கான், இஷாந்த் சர்மா, பும்ரா ஆகியோர் தொடர்ந்து மூன்று போட்டிகளில் கோல்டன் டக் ஆகியிருந்தனர்.
@AFP
@