கொல்கத்தா: மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி நாளை மம்தா பானர்ஜியை சந்தித்து பேசுகிறார். மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியை, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் சமீபத்தில் சந்தித்து பேசினார். இந்நிலையில், முன்னாள் முதல்வரும் மதசார்பற்ற ஜனதா தள தலைவருமான குமாரசாமி மம்தாவை நாளை சந்தித்து பேசுகிறார். இது 2024 மக்களவை தேர்தலில் காங்கிரஸ், பாஜ அல்லாத கட்சிகள் அடங்கிய கூட்டணி அமைப்பதற்கான முயற்சி என கருதப்படுகிறது.