காஞ்சிபுரத்தை அடுத்த வளதோட்டம் பகுதியில் செயல்பட்ட தனியாருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை குடோனில், நேற்று பிற்பகலில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் பலியானார்கள்.
மேலும் இந்த வெடி விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தொழிலாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி மற்றும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இருவரும் இரங்கல்களை தெரிவித்துள்ளார். மேலும், நிவாரணமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை வளத்தோட்டம் பகுதியில் உள்ள 2 ஊராட்சி நடுநிலை பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்த நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.