சென்னை: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளி மண்டல கீழடுக்குகளில், கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், சென்னையில் அடுத்த, 24 மணி நேரத்தில் வானம் மேகமூட்டமாக காணப்படும். ஒருசில இடங்களில், […]