வாஷிங்டன்: மேலும் ஒரு முக்கிய விவகாரத்தை அம்பலப்படுத்த உள்ளதாக ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளது. அதானி குழுமம் பங்குச்சந்தை முறைகேட்டில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட ஆய்வு அறிக்கையால், அதானியின் சொத்துமதிப்பு பன்மடங்கு சரிந்தது குறிப்பிடத்தக்கது.