லண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் முன்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தின் போது கற்களும் பாட்டில்களும் வீசப்பட்டன.
பஞ்சாபில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருவதைக் கண்டித்து சுமார் 2 ஆயிரம் பேர் இந்தியத் தூதரகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கல்வீச்சு, முட்டை வீச்சு மற்றும் மை பாட்டில் வீச்சு சம்பவங்களால் வன்முறை தலைவிரித்தாடியது. இதற்கு பதிலடியாக தூதரக அதிகாரிகள் பிரம்மாண்டமான தேசியக் கொடியை பறக்க விட்டனர்.
காலிஸ்தான் ஆதரவு போராட்டத்தை அடுத்து, தூதரக வளாகத்தை சுற்றி போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. போலீசார் தடுப்புகளை வைத்து, சாலைகளில் இருந்து தூதரகம் நோக்கி வருவோரை கட்டுப்படுத்தினர்