கலிபோர்னியாவில் வீசிய புயலால் பல்லாயிரக்கணக்கான மக்கள் மின்சாரம் இல்லாமல் இருளில் முடங்கிக் கிடக்கிறார்கள்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்களை வெளியேறும் படி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. கனமழை காரணமாக ஆறுகள் கரை புரண்டு ஓடுகின்றன.
கடந்த டிசம்பர் மாதம் முதலே மத்திய கலிபோர்ணியா மாகாணம் தொடர்ச்சியாகப் புயல்களால் பாதிப்படைந்துள்ளது. சுமார் 14 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும் 47 ஆயிரம் பேர் வெளியேறும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பலத்த சூறைக்காற்று வீசி மரங்களும் மின்கம்பங்களும் சாய்ந்ததால் மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. சுமார் ஒரு லட்சம் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சாரம் இல்லாமல் இருள் சூழ்ந்துள்ளது.