தொடர் வெற்றி தனுஷ் நடிப்பில் கடந்தாண்டு வெளியான திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களின் அமோகமான வரவேற்பை பெற்றது. அதிலும் குறிப்பாக மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று தனுஷிற்கு தேவையான வெற்றியை தந்தது. இதைத்தொடர்ந்து கடந்த மாதம் தனுஷ் தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்த வாத்தி திரைப்படம் வெளியானது. என்னதான் இப்படம் சற்று கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சாதனை படைத்துள்ளது. நூறு கோடிக்கு மேல் வசூலித்த வாத்தி திரைப்படம் தெலுங்கில் விஜய்யின் வாரிசு படத்தின் வசூலை முறியடித்துள்ளது
உயரும் மார்க்கெட் திருச்சிற்றம்பலம் திரைப்படம் நூறு கோடிக்கு மேல் வசூலித்ததை அடுத்து வாத்தி திரைப்படமும் நூறு கோடி வசூலை தாண்டியுள்ளது. இவ்வாறு அடுத்தடுத்து வசூலில் சாதனை படைத்து வரும் தனுஷின் மார்க்கெட்டும் கணிசமாக உயர்ந்துள்ளது. மேலும் இவர் அடுத்தடுத்து நடித்து வரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் பல மடங்கு உயர்ந்துள்ளது. அடுத்ததாக தனுஷ் தன் ஐம்பதாவது திரைப்படத்தை தானே இயக்கி நடிக்கவுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இப்படம் மிகப்பிரமாண்டமாக உருவாகவுள்ளதாம். கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் எஸ்.ஜெ.சூர்யா மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோர் நடிப்பதாகவும் தகவல் வந்துள்ளது
கேப்டன் மில்லர் சாணி காகிதம் படத்தை இயக்கிய அருண் மாதீஸ்வரன் தனுஷ் நடித்துவரும் கேப்டன் மில்லர் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வருகிறது. ஆக்ஷன் படமாக உருவாகும் இப்படம் ஒரு பான் இந்திய படமாகவும் இருக்கும் என்றும் தகவல் வந்துள்ளது. மேலும் இப்படத்திற்காக தனுஷ் தன் கெட்டப்பை மாற்றிக்கொண்டு வித்யாசமாக தோற்றமளித்து வருகின்றார். அருண் மாதீஸ்வரனின் முந்தைய படங்களான ராக்கி, சாணி காகிதம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் இப்படத்தின் மீது கூடுதல் எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. பீரியட் படமாகவும், ஆக்ஷன் படமாகவும் உருவாகும் கேப்டன் மில்லர் திரைப்படம் ரசிகர்களுக்கு புது வித அனுபவத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது
டூப் இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் அதிகளவு டூப்களை பயன்படுத்துவதாக ஒரு தகவல் வந்துள்ளது. படப்பிடிப்பு தளத்தில் தனுஷை போலவே எப்போதும் மூன்று நபர்கள் இருக்கிறார்களாம். தனுஷ் க்ளோஸ் அப் ஷாட்களில் மட்டுமே நடிப்பார் என்றும் லாங் ஷாட் மற்றும் இதர ஷாட்களில் அவரின் டூப் தான் நடிக்கின்றனர் என்றும் பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார். இதைக்கேள்வி பட்ட ரசிகர்கள் தனுஷ் ஏன் அதிகளவில் டூப்களை பயன்படுத்துகிறார். ஒருவேளை அவருக்கும் இயக்குனருக்கும் ஏதேனும் பிரச்சனையா ? கேப்டன் மில்லர் படத்தில் நடிக்க தனுஷிற்கு ஆர்வம் இல்லையா ? என்பது போல பல கேள்விகளை ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். ஆனால் படத்தில் ஏகப்பட்ட சண்டை காட்சிகள் இருப்பதாலே தனுஷ் டூப்களை பயன்படுத்தலாம் எனவும் ஒரு சில ரசிகர்கள் கூறி வருவதும் குறிப்பிடத்தக்கது