சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை அதிமுக சார்பில் வரவேற்பதாக சட்டப்பேரவையில் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். இதற்கு எடப்பாடி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிமுக சார்பில் எதிர்க்கட்சி தலைவராக நான் இருக்கிறேன்; ஒரு கட்சிக்கு ஒருவர் என பேசக்கூறியுள்ளீர்கள். ஆனால், பெரும்பான்மை இல்லாதவரை பேச வைப்பது என்ன நியாயம். ஓ.பன்னீர் செல்வத்தை பேச அனுமதித்ததற்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். முக்கிய மசோதா என்பதால் முன்னாள் முதலமைச்சர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பேச வாய்ப்பு அளித்ததாக சபாநாயகர் விளக்கம் அளித்தார்.