இந்தியாவின் முதனிலை செல்வந்தர்களில் ஒருவராக கருதப்படும் முகேஷ் அம்பானியின் சமையல்காரர் பெருந்தொகை சம்பளத்தை ஈட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அம்பானி மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மிகவும் எளிமையான வாழ்க்கை முறையை தனது இளம் காலம் முதல் பின்பற்றி வந்தார் எனவும், 1970களில் கலிபோர்னியாவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற சந்தர்ப்பத்திலும் அவர் சைவ உணவுகளை உட்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்தக் காலத்திலேயே அவர் இறைச்சி வகைகளை தவிர்த்து வந்தார் எனவும் மது அருந்துவதையும் தவிர்த்து வந்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சாதாரண பொதுமக்கள் உட்கொள்ளும் சோறு சப்பாத்தி போன்ற உணவு வகைகளையே அம்பானியும் உட்கொண்டு வருகின்றார்.
தனது அன்றாட உணவு முறைகளில் சாதாரண பொது மக்களின் உணவு வகையிலேயே அம்பானியும் உட்கொள்கின்றார்.
இந்த செல்வந்தர் சொகுசு ரெஸ்டாரன்ட் ஒன்றிலும் சாதாரண தெருக்கடையிலும் சாப்பிடுவதனை ஒன்றாகவே பார்க்கின்றார்.
பெருந்தொகை செல்வங்களை சேர்த்த ஒரு நபர் இவ்வாறு இந்த முன்னேற்றத்தை எய்தினார் என்பதை பறைசாற்றும் அவரது வகையில் உழைப்பும் வாழ்க்கை முறை அமைந்துள்ளது.
அம்பானி தாய் உணவு (Thai Food) வகைகளை விரும்பி உண்பதாகவும் அதிகமாக தென்னிந்திய உணவு வகைகளான இட்லி தோசை போன்றவற்றை விரும்புவதாகவும் தெரிவிக்கப்படுகிறது கடுமையான வேலை பளுவிற்கு மத்தியிலும் குடும்பத்துடன் இரவு உணவை உட்கொள்வதை பழக்கமாகக் கொண்டுள்ளார்.
அம்பானி தனது பணியாளர்களுக்கு சிறந்த முறையில் நலன்களை வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2007 ஆம் ஆண்டு அவருடைய பிரத்யேக சாரதிக்கு வழங்கப்படும் சம்பளம் பற்றிய தகவல்கள் வெளியாகியிருந்தன.
Unsplash
மாதம் ஒன்றுக்கு குறித்த சாரதி இரண்டு லட்சம் ரூபாய் வரையில் சம்பளம் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அம்பானியின் சமையல்காரரும் நிபுணரும் 2 லட்சம் ரூபாய் சம்பளம் பெற்றுக் கொள்கின்றார்.
அம்பானியின் சமையல்காரரான அணிக்கிலியா என்பவர் கடமை ஆற்றி வருகிறார்.
இந்த சம்பளத் தொகையானது புதுடெல்லியில் சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்கான சம்பளத்தை விடவும் அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் மாதம் 90 ஆயிரம் ரூபாய் சம்பளத்தை பெற்றுக் கொள்கிறார் அம்பானி தனது பணியாளர்களை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்வதில் அதிக சிரத்தை எடுத்துக் கொள்கின்றார் என்பது நிதர்சனமாகின்றது.