இலங்கையில், இறக்குமதி செய்யப்படும் பால்மா விலையை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறைக்கப்படவுள்ள விலை
அதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மா பொதியின் விலையை 200 ரூபாவால் குறைக்கவுள்ளதாக இறக்குமதியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், 400 கிராம் பால்மா பொதியின் விலையை 80 ரூபாவில் குறைக்கவுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், இந்த விலைக்குறைப்பானது எதிர்வரும் வாரம் முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.