தொடர் ஒற்றை தலைவலியால் உயிரிழந்த டிக்டாக் பிரபலம்: கடைசி நேரத்தில் வெளியிட்ட உருக்கமான பதிவு


அமெரிக்காவின் டிக்டாக் பிரபலம் ஒருவர் தொடர்ச்சியான ஒற்றை தலைவலியால் துன்பப்பட்டு வந்த நிலையில் தற்போது பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பார்வை நரம்பு அழற்சி

அமெரிக்காவின் புகழ்பெற்ற டிக்டாக் பிரபலமான ஜெஹானே தாமஸ்(30) என்ற பெண்மணி டிக்டாக் மூலம் அமெரிக்காவில் பலராலும் அறியப்பட்டவராவார்.

தொடர் ஒற்றை தலைவலியால் உயிரிழந்த டிக்டாக் பிரபலம்: கடைசி நேரத்தில் வெளியிட்ட உருக்கமான பதிவு | 30 Year Old Tiktok Star Dies Persistent Migraines@instagram

டிக்டாக்கில் கிட்டதட்ட 72000 ஃபாலோவர்களை கொண்ட ஜெஹானாவிற்கு பார்வை நரம்பு அழற்சி என்ற பிரச்சனை இருந்திருக்கிறது. இது கண்ணின் பார்வை நரம்பில் வீக்கம் ஏற்படுவதால் உண்டாகும் பிரச்சனையாகும்.

தொடர் ஒற்றை தலைவலியால் உயிரிழந்த டிக்டாக் பிரபலம்: கடைசி நேரத்தில் வெளியிட்ட உருக்கமான பதிவு | 30 Year Old Tiktok Star Dies Persistent Migraines@instagram

தலையில் துடிப்பு அல்லது படபடப்பான ஒரு வலி உருவாவதை ஒற்றை தலைவலி என மருத்துவ துறையில் கூறுகிறார்கள்.

பிரகாசமான வெளிச்சம், பல வண்ணங்களை தெளிவாகப் பார்க்க முடியாமை, மங்கலான பார்வை போன்ற பிரச்சனைகள் ஒற்றை தலைவலியால் ஏற்படும்.

உருக்கமான பதிவு

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஜெஹானேவின் நண்பர் அலெக்ஸ் ரீஸ்ட் என்பவர் ஜெஹானேவின் மரணமடைந்து விட்டதாக பகிர்ந்துள்ளார். 

அவர் மரணமடைவதற்கு சில தினங்களுக்கு முன்பு அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவொன்றை போட்டுள்ளார்.

“கிட்டதட்ட 2 ஆண்டுகளாக அழுத்தம் காரணமாக எனக்கு ஒற்றை தலைவலி பிரச்சனை இருந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு நான் ஆப்டிக் நியூரிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டேன்.

தற்போது எனக்கு ஏற்படும் ஒற்றை தலைவலி என்னை முற்றிலும் முடக்கி விட்டது. முதலில் எனது மகன்களை பார்த்துக் கொண்டதற்காக எனது குடும்பத்திற்கு நன்றி. எனது டிக்டாக் வீடியோக்களுக்கு எனக்கு உதவிய நண்பர்களுக்கும், என்னை எப்போதும் ரசித்து ஊக்குவிக்கும் நண்பர்களுக்கு நன்றி.

தொடர் ஒற்றை தலைவலியால் உயிரிழந்த டிக்டாக் பிரபலம்: கடைசி நேரத்தில் வெளியிட்ட உருக்கமான பதிவு | 30 Year Old Tiktok Star Dies Persistent Migraines@tiktok

எனது உடல் நிலை மோசமாக இருக்கிறது. நான் சில மருத்துவ சிகிச்சைக்குப் பின்பாக மீண்டு வருவேன் என நம்புகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

இதனை பதிவிட்ட சில தினங்களில் அவர் உயிரிழந்த சம்பவம் அவரது பெற்றோர், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.





Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.