" 23ஆம் புலிகேசி படமும் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கும் ஒன்னுதான் ” – அண்ணாமலை

தமிழ்நாட்டில் கொலை – கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளது; பாஜக. வளர்ச்சியை அவர்கள் (அதிமுக) ரசிக்க விரும்பவில்லை என நினைக்கிறேன். அவர்களின் கட்சியின் வளர்ச்சியை நான் நிறுத்துகிறேன் என்ற கவலை அவர்களக்கு உள்ளது‌‌ என மாநில தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார்.
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று காலை சென்னையில் இருந்து விமான மூலம் டெல்லி புறப்பட்டார். டெல்லி புறப்பட்டதற்கு முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை பேசுகையில், ”தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நீண்ட நாட்களாக அரசியலில் உள்ளார். இருந்தாலும் சமூக வலைதளங்களில் கருத்துக்களை தெரிவிக்கும் 18, 19 வயது சிறுவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். ஆவண படுகொலை நடக்கிறது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் தமிழக காவல்துறை கவனம் செலுத்தவில்லை. கொலை, கொள்ளை சம்பவங்கள் குறையவில்லை. இன்னும் அதிகரித்துள்ளது. சமூக வலைதளங்களில் மட்டும் காவல்துறை கண்ணாக இருக்கிறது.
image
சில உள்கட்சி விவகாரங்களை வெளியே பேசுவது அழகல்ல. நேரமும் காலமும் வரும்போது வெளியே பேசுவேன். தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு 23-ம் புலிகேசி படத்தில் வருவது போலதான். (காவல்துறையில் இருந்து கொண்டு எப்படி 30 கோடி சம்பாதித்தார் என்று செந்தில் பாலாஜி கூறியதற்கு அண்ணாமலை பதிலளித்துள்ளார்) பாஜக வளர்ச்சியை அவர்கள் (அதிமுக) ரசிக்க விரும்பவில்லை என நினைக்கிறேன். அரசியலில் யாரும் நண்பர் இல்லை. நிரந்தர நண்பரும், நிரந்தர எதிரியும் என அரசியலில் யாரும் கிடையாது. தனித்து போட்டியிடுவது குறித்து நேரமும் காலமும் வரும் போது பேசுவேன். தமிழக அரசியலில் அண்ணாமலையை எதிர்க்க இவ்வளவு பேரா? கூட்டணி கட்சி தலைவர்கள் என்னை விமர்சனம் செய்வதை நான் வரவேற்கிறேன்.
image
அவர்களின் கட்சியின் வளர்ச்சியை நாங்கள் நிறுத்துகிறேன் என்ற கவலை உள்ளது‌‌. தவறு கிடையாது. அதைத்தாண்டி அவர்கள் வளர வேண்டும் என நினைக்கிறார்கள்” என்றார். ஆளுநரும் இன்று டெல்லி செல்கிறாரே என கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, ஆளுநர் டெல்லி செல்லும் விஷயம் நீங்கள் தெரிவித்த பிறகுதான் எனக்கு தெரியும் என்றார். இன்று டெல்லி செல்லும் மாநில தலைவர் அண்ணாமலை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து பேச இருப்பது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.