நாகரீகத்தின் உச்சியிலிருக்கும் சுவிஸ் நகரமான ஜெனீவாவில், அதிக ஜனத்தொகையும், வறுமையும் இணைந்து காணப்படும் நாடுகளில் பரவும் நோய் என அறியப்படும் நோய் ஒன்று அதிகரித்துவருகிறது.
அது என்ன நோய்?
சொறி சிரங்கு எனப்படும் scabies எனப்படும் நோய்தான் ஜெனீவாவில் தற்போது அதிகரித்துவருகிறது.
வெப்பமான, அதிக ஜனத்தொகையும், வறுமையும் இணைந்து காணப்படும் நாடுகளில் பொதுவாக அதிக அளவில் காணப்படும் நோய் என, இந்த scabiesஐ உலக சுகாதார அமைப்பு குறிப்பிடுகிறது.
ஜெனீவாவில் அதிகரிப்பு
ஆனால், செல்வந்தர்கள் அதிகம் வாழும் ஜெனீவாவில் தற்போது இந்த scabies அதிகம் பரவிவருகிறது. இந்த ஆண்டு துவங்கியதிலிருந்து, இதுவரை 51 பேருக்கு இந்த scabies உறுதிசெய்யப்பட்டுள்ளதாக ஜெனீவா பல்கலை மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இந்த நோய், mites எனப்படும் சிறுபூச்சிகள் தோலுக்கடியில் முட்டையிடுவதால் உருவாகிறது. அவை தோலில் அரிப்பை ஏற்படுத்துகின்றன.
Pixabay
இந்த நோய் குடும்பத்துக்குள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு வேகமாக பரவக்கூடியதாகும்.
இந்த நோய்க்கான மருந்து என்ன தெரியுமா?
ஒரு காலகட்டத்தில், பலர் கோவிடைக் குணமாக்கும் என்று நம்பி எடுத்துக்கொண்ட Ivermectinதான் இந்த scabiesக்கான மருந்து. உண்மையில் அதை கோவிட் சிகிச்சைக்குப் பயன்படுத்தக்கூடாது, இந்த scabiesக்கு அது நல்ல பலன் தரும்.
ஆனால், இந்த Ivermectin சுவிட்சர்லாந்தில் காப்பீட்டின் கீழ் வருவதில்லை. ஆகவே, scabies சிகிச்சைக்கான செலவும் அதிகம்தான்.