குறைந்த வருமானம் பெறும் இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் பிரதமர் தினேஸ் குணவர்தன விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது இது குறித்து பிரதமர் அறிவித்துள்ளார்.
இதன்படி, குறைந்த வருமானம் பெறும் மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு சகலவிதமான நிவாரணங்களையும் வழங்குவதாக பிரதமர் அறிவித்துள்ளார்.
நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான வழி
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளும் அதற்கான வழியை சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.
நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு தற்போது ஒரு கதவு திறக்கப்பட்டுள்ளது என்றும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரமல்ல, முழு நாட்டிற்கும் கதவு திறக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தினேஸ் குணவர்தன இதன்போது சுட்டிக்காட்டினார்.