Electricity bill Payment fraud: ஆன்லைன் மூலம் மின்சாரக்கட்டணம் செலுத்திய பெண்ணிடம் 7 லட்சம் ரூபாய் திருட்டு!

இந்தியா முழுவதும் டிஜிட்டல் முறையில் பல விஷயங்கள் நடைபெறுவதால் அதை பயன்படுத்தி குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. பலர் இதுபோன்ற சைபர் குற்றவாளிகளின் வலையில் சிக்கி மிகப்பெரிய இழப்புகளை சந்திக்கிறார்கள்.

மும்பையில் 65 வயதான பெண் ஒருவருடம் SMS மூலமாக மின்கட்டணம் செலுத்தவில்லை என்று SMS மெசேஜ் வந்துள்ளது. விரைவாக கட்டணம் செலுத்தவில்லை என்றால் உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று அதில் இருந்துள்ளது. கூடுதலாக மின்கட்டணம் செலுத்த இந்த நம்பரை கால் செய்யுமாறு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனால் பதட்டம் அடைந்த அந்த பெண் SMS மூலம் வந்த போன் நம்பருக்கு கால் செய்துள்ளார். போனை எடுத்தவர் Adani Electricity அலுவலகத்தில் வேலை செய்வதாகவும் தான் மின்சார கட்டணம் செலுத்த உதவுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ‘Team viewer Quick-support’ ஆப் Install செய்யுமாறு கூறியுள்ளார். அவர் கூறியதுபோல அதன் ID மற்றும் Passcode போன்றவரை உருவாக்கி அவரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணின் ஸ்மார்ட்போன் அந்த நபரின் கட்டுப்பாட்டுக்கு சென்றுவிட்டது.

இதையடுத்து அடுத்தடுத்து அந்த பெண்ணிற்கு 4,62,959 லட்சம், 1,39,900 லட்சம், 89,000 ஆயிரம் ரூபாய் வங்கியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாக SMS வந்துள்ளது. மொத்தமாக 6,91,859 லட்சம் ரூபாய் அவரது வங்கியில் இருந்து திருடப்பட்டுள்ளது.

மேலும் அடுத்தடுத்து இதுபோன்ற பணம் பரிமாற்றம் நிகழ்ந்ததால் SBI Fraud management team அவரை அணுகியுள்ளது. அந்த பெண் தான் எந்த பண பரிமாற்றத்தையும் செய்யவில்லை என்று கூறியுள்ளார். இதையடுத்து அருகில் இருக்கும் அந்தேரி காவல் நிலையத்திற்கு சென்று தான் ஏமாற்றப்பட்டது குறித்து போலீசாரிடம் சென்று புகார் தெரிவித்துள்ளார்.

போலீசார் செக்ஷன் 420, 66(C), 66(D) ஆகிய IPC பிரிவாகிழ்ந் கீழ் FIR வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். சமீபகாலமாக மும்பையில் இதுபோன்ற SMS மூலமாக பல சைபர் குற்றங்கள் நடக்கின்றன.

இதேபோல வங்கி கணக்குகளை மூடுவது, மின்சார கட்டணம் செலுத்துவது போன்ற பல வகைகளில் SMS மூலமாக இந்த குற்றங்கள் நடக்கின்றன. ஸ்மார்ட்போன்களை அவர்களின் கட்டுப்பாட்டில் எடுத்து OTP அல்லது போன் நம்பர் மூலமாக வங்கியில் இருந்து பணம் எடுக்கப்படுகிறது.

இதனால் எப்போது SMS மூலம் எந்த ஒரு லிங்க் அல்லது மொபைல் எண்ணையும் தொடர்பு கொள்ளவேண்டாம். யாராவது உங்களின் SMS OTP எண்ணை கேட்டால் கூறவேண்டாம். எப்போதும் SMS வந்ததும் அதை தெளிவாக படித்து பின்னர் செயல்படுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.