உலக நீர் தினத்தை முன்னிட்டு ஓவியம், கட்டுரை, மேடை நாடகம் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளன.
இரத்மலானையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீர் மற்றும் சுத்திகரிப்புக்கான சிறப்பு நிலையத்தின் கேட்போர் கூடத்தில் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் உலக நீர் தின விழா நேற்று (22) இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வின் போது உலக நீர் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான ஓவியம், கட்டுரை, மேடை நாடகம் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கான பரிசில்கள் வழங்கப்பட்டன.
இதேவேளை நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையில் 25 வருடங்களுக்கு மேலாக சேவையாற்றிய ஊழியர்களுக்கு தங்க நாணயமும், கடந்த க.பொ.த உயர்தர பரீட்சையில் 3 ஏ சித்தி பெற்ற ஊழியர்களின் பிள்ளைகளுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது.
நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தலைவர் நிசாந்த ரணதுங்கவின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகிய இந்நிகழ்வில், UNDP இலங்கை வதிவிட பிரதிநிதி அஷூசா குபோட்டா சிறப்புரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.