கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கவிதா என்ற பெண் ஒருவர் மீது கணவர் ஆசிட் வீசியுள்ளார். அந்த நபர் ஆசிட் வீசும் போது வழக்கறிஞர் ஒருவர் தடுக்க முயன்றுள்ளார். அப்போது வழக்கறிஞர் மீதும் ஆசிட் பட்டதில் அவரும் காயமடைந்துள்ளார்.
இதனையடுத்து அருகில் இருந்த பெண் காவலர் இந்துமதி என்பவர் ஆசிட் வீசிய நபரை மடக்கி பிடித்துள்ளார். மேலும், ஆசிட் வீசியதில் படுகாயம் அடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஆசிட் வீசிய நபரிடம் தீவிர விசாரணை நடத்திய வருகின்றனர். இந்த நிலையில் ஆசிட் வீசியவரை துரத்திப் பிடித்த பெண் காவலருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
மேலும், காவலர் இந்துமதிக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி 5000 ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கியுள்ளார்.