விஜய் டிவி சீரியல் நடிகை விலகல்!?

ஈரமான ரோஜாவே 2 சீரியலில் இருந்து நடிகை ப்ரியா வெளியேறப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ஈரமான ரோஜாவே 2 சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. காதலித்த நபரை விட்டு வேறொருவரை திருமணம் செய்தால் அவர்களின் மனநிலை மற்றும் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று இயல்பாக காட்டப்படுகிறது.

அதே போல், இன்றைய சமூகத்தில் நடைபெறும் விஷயங்களை ஒவ்வொரு எபிசோடிலும் எடுத்து வருகின்றனர். இந்த சீரியலில் நடிக்கும் திரவியம், சுவாதி ஆகிய இருவருக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் பிரியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுவாதி சீரியலைவிட்டு விலக உள்ளதாக தகவல் பரவியது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில், நடிகை சுவாதி, திரவியத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டா ஸ்டோரியில் வைத்துள்ளார்.

இதனால் அவர் தொடர்ந்து நடிக்கிறார் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். அதே நேரத்தில், திரவியம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், காரணம் இல்லாமல் எதுவும் நடக்காது. அது நல்லதுக்கே நடப்பதாக நம்புங்கள்.

உங்கள் நாட்களை கசப்பின்றி, நல்ல நாட்களாக மாற்ற, மாற்றங்களை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.