திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காஞ்சியார் பகுதியைச் சேர்ந்தவர்கள் பிஜேஸ்-அனுமோல் தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். அந்த நிலையில், பிஜேஸ் கடந்த 18-ந் தேதி மனைவி அனுமோல் பள்ளியில் இருந்து வந்தபோது மாயமானதாக போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் பின்னர் பிஜேசும் மாயமாகி உள்ளார்.
இதற்கிடையே, அனுமோலின் தந்தை ஜான் அனுமோலுக்கு போன் செய்துள்ளார். அப்போது, போன் ரிங் ஆகி பின்னர் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டது. இதனால் சந்தேகமடைந்த ஜான் தான் மனைவியுடன் தன் மகளை பார்ப்பதற்கு வீட்டுக்கு வந்தனர். அந்த நேரத்தில் வீட்டின் அறையில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.
இதையடுத்து அவர்கள் அந்த அறைக்குச் சென்று பார்த்தபோது கட்டிலுக்கு அடியில் போர்வை சுற்றப்பட்ட நிலையில் அனுமோல் உடல் கிடந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர்கள் சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு புகார் அளித்தனர்.
அதன் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அனுமோலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்த சம்பவம் குறித்து போலீசார் தெரிவித்ததாவது, “அனுமோல் இறந்து மூன்று நாட்களுக்கு மேல் ஆகி இருக்கலாம். அவரது உடல் அழுகிய நிலையில் இருப்பதால் காயங்கள் கண்டுபிடிக்க முடியவில்லை.
தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட தகராறால் பிஜேஸ் தனது மனைவியை கொலை செய்து விட்டு தப்பி ஓடி இருக்கலாம். அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருப்பதால் அவரை தீவிரமாகத் தேடி வருகிறோம். பிரேத பரிசோதனைக்கு பிறகு முழுமையான முடிவுகள் தெரியவரும்” என்று பொலிசார் தெரிவித்தனர்.