டெல்லி: அதானி குழுமத்தை அடுத்து, டிவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் அதிபரின் நிறுவனம் முறைகேடு செய்ததாக ஹின்டன்பர்க் புகார் தெரிவித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஆய்வு நிறுவனமான ஹின்டன்பர்க் ஜோக் டோர்சேவின் பிளாக் நிறுவனம் பற்றி புது ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. பணம் செலுத்துவதற்கு பிளாக் தளத்தை பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கையை மிகைப்படுத்தி காட்டியதாக ஜோக் மீது புகார் கூறப்பட்டுள்ளது.