புதுடில்லி : மத்திய அரசின் கீழ் இயங்கும், ‛பெல்’ நிறுவனம் நாட்டின், பாதுகாப்புப் படைகளுக்கான எலக்ட்ரானிக்ஸ் பிரிவு உபகரணங்களை தயாரிக்கிறது.
இந்நிறுவனத்துடன், விமானப்படைக்கு தேவையான எலக்ட்ரானிக்ஸ் உபகரணங்கள் வாங்குவது குறித்து, 3,700 கோடி ரூபாய்க்கு, நம் ராணுவம், புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
முதல் ஒப்பந்தம், 2,800 கோடி ரூபாய் மதிப்பில், ‛ஆருத்ரா’ எனப்படும் மீடியம் பவர் ரேடார்கள் வாங்குவது தொடர்பாகவும், இரண்டாவது ஒப்பந்தம், 950 கோடி ரூபாய் மதிப்பில், 129 டி.ஆர்.,-118 ரக கண்காணிப்பு எச்சரிக்கை கருவிகள் வாங்குவது தொடர்பாகவும் கையெழுத்தாகி உள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement