டெல்லி: சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு முறையாக அறிவிக்க வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நிராகரித்துவிட்டதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு விளக்கம் அளித்துள்ளார். உயர் நீதிமன்றங்களில் ஆங்கிலத்தை தவிர மற்ற மொழிகளை பயன்படுத்த அனுமதி தொடர்பான பரிந்துரைகளின் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் முழு அமர்வு இந்த பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளிப்பதில்லை என்று முடிவு செய்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.