தமிழ் சினிமா இயக்குனர்களில் தவிர்க்க முடியாத இடத்தை பெற்றிருப்பவர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்களுக்கென்றே தனியொரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அந்த வகையில் வெற்றிமாறன் இயக்கத்தில் அடுத்ததாக ‘விடுதலை’ படம் வெளியாகவிருக்கிறது. இந்தப்படத்திற்கான ரிலீஸ் வேலைகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது.
வெற்றிமாறன் இயக்கத்தில் கடைசியாக ‘அசுரன்’ படம் வெளியானது. தனுஷ் நடிப்பில் வெளியான இந்தப்படத்தின் வெற்றிக்கு பிறகு சூரியை ஹீரோவாக வைத்து படம் இயக்கும் பணிகளில் இறங்கினார் வெற்றிமாறன். விஜய் சேதுபதி இந்தப்படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
‘அட்டகத்தி’ தினேஷ் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘விசாரணை’ படத்தினை போலவே ‘விடுதலை’ படமும் உருவாக்கி வருகிறது. ஜெயமோகனின் துணைவன் என்ற நாவலை மையமாக வைத்து இந்தப்படம் தயாராகி வருகிறது. எல்ரெட் குமார் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.
நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்த ‘விடுதலை’ படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முழுவதுமாக நிறைவடைந்தது. இந்தப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. தமிழக முழுவதும் இந்தப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது. அண்மையில் ‘விடுதலை’ படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடந்தது.
Pasanga Kishore: 4 வயது மூத்த சீரியல் நடிகையை திருமணம் செய்த பசங்க கிஷோர்: குவியும் வாழ்த்துக்கள்.!
இந்தப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருவதை தொடர்ந்து ரிலீசுக்கான பணியும் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் ‘விடுதலை’ படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இந்தப்படத்திற்கு தற்போது ‘ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் பார்க்கக்கூடிய வகையில் ‘விடுதலை’ படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. அனேகமாக படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதால் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரன்னிங் டைம் 2 மணிநேரம் 30 நிமிடங்கள் என்ற தகவலும் கிடைத்துள்ளன. ‘விடுதலை’ படம் வரும் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Leo: தளபதியோட அந்த ஸ்டைலு.. தீயாய் இருக்கே: ‘லியோ’ படத்தின் வெறித்தனமான வீடியோ.!