விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகிலுள்ள ஜம்போதி கிராமத்தில் வசித்து வருபவர் தான் சத்யராஜ். இவர் அதே கிராமத்தில் இருந்த சசிகலா என்ற பெண்ணை காதலித்து கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார். கணவர் சத்யராஜ் சென்னையில் தங்கியவாறு கேட்டரிங் தொழில் செய்து வந்து இருக்கின்றார்.
இத்தகைய நிலையில், செஞ்சி அருகே இருக்கும் சங்கராபரணி ஆற்று பாலத்தில் அவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, சத்யராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுபற்றி காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரித்த நிலையில், இதற்கு காரணம் என் மனைவி சசிகலாவும், அவரது கள்ளக்காதலன் ஜகனும் தான் என்று ஒரு பேப்பரில் எழுதி காட்டியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சத்யராஜ் மனைவியான சசிகலா மற்றும் அவருடைய காதலன் ஆண் நண்பரான ஜகன் இருவரையும் கைது செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.