ஆண்கள் பெண்கள் என இன பாகுபாடின்றி பொடுகு அனைவருக்கும் ஏற்படுகின்றது.
பொடுகு வந்தால் தலையில் அரிப்பு அதிகரிக்கும். இதற்கு பல ஷாம்பு மற்றும் பல எண்ணெய் வகைகளை பயன்படுத்துகின்றீர்கள். ஆனால் அதை இயற்கையான முறையில் வீட்டில் இருந்தாவாரே எவ்வாறு தீர்க்கலாம் என்று பார்க்கலாம்.
முதலில் பொடுகு வருவதற்கான மூல காரணங்களை தெரிந்துக்கொள்வோம்.
அதிக அளவிலான சக்கரை சேர்த்த உணவை உற்கொள்வதாலும் பொடுகு ஏற்படுகின்றது.
தலையில் பூஞ்சை தொற்று வந்தாலும் பொடுகு வர வாய்ப்பு உள்ளது.
தலையில் அழுக்கு தேங்கியிருந்தாலும் வரும்.
இதற்கு ஒரு தீர்வை காணலாம். பொடுகு அற்ற ஆரோக்கியமான கூந்தலை பெற இந்த மாஸ்க்கை செய்து பயன்படுதினால் சிறந்த ஒரு பெறுபேற்றை பெறலாம்.
தேவையான பொருட்கள்
-
தயிர் -1 தே.கரண்டி
- கறிவேப்பிலை – சிறிதளவு
- இஞ்சி துண்டு – சிறிதளவு
செய்முறை
-
முதலில் கறிவேப்பிலை மற்றும் இஞ்சியை அரைத்துக் கொள்ள வேண்டும்.
-
பின்னர் ஒரு சிறிய பாத்திரத்தில் தயிர், கறிவேப்பிலை மற்றும் இஞ்சி சேர்த்து கலக்க வேண்டும்.
-
கறிவேப்பிலை மற்றும் இஞ்சி இல்லையென்றால் கறிவேப்பிலை தூள் மற்றும் 1 டீஸ்பூன் சுக்கு பொடி சேர்க்கலாம்.
-
இதை அப்படியே தலையில் தேய்த்து 30 நிமிடங்கள் வைக்க வேண்டும்.
- பின்னர் வாரத்திற்கு ஒரு முறை என 3 வாரங்கள் பயன்படுத்தினால் பொடுகு தொல்லையில் இருந்து விடுப்படலாம்.
இதை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்
-
தயிரில் புரதம் காணப்படுவதால் அது முடி வளர்ச்சிக்கு உதவும்.
-
கறிவேப்பிலையில் பூஞ்சை எதிர்ப்பு சக்தி காணப்படுவதால் தலையில் ஏற்படும் அரிப்பை தடுக்கும்.
-
இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு இருப்பதால் பொடுகுத் தொல்லையுடன் முடி உதிர்வதையும் தடுக்க உதவும்.