தெலங்கானா மாநிலம் சைபராபாத்தில், பாதுகாப்பு துறையைச் சேர்ந்த இரண்டரை லட்சம் பேரின் தனிப்பட்ட தகவல்கள் உட்பட சுமார் 17 கோடி பேரின் தகவல்களை திருடி விற்பனை செய்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
போலீசாரின் விசாரணையில், அரசு மற்றும் முக்கிய நிறுவனங்கள், தனிப்பட்ட நபர் மற்றும் இரகசிய தகவல்களை ஜஸ்ட் டயல் உள்ளிட்ட பல தளங்கள் மூலம் இக்கும்பல் வாங்கி, விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.
ஜஸ்ட் டயலில் தனிப்பட்ட தகவல்களை கேட்போரின் விவரங்களை பட்டியலிட்டு, தொடர்பு கொண்டு இக்கும்பல் தகவல் விற்பனை செய்து பணம் பெற்றது தெரியவந்துள்ளது.