டெல்லி: தமிழ்நாட்டில் வேலூர், தஞ்சாவூர், நெய்வேலி, ராமநாதபுரம், சேலம் ஆகிய மாவட்டங்களில், ‘உடான்’ திட்டத்தின் கீழ் விமான சேவைகள் விரைவில் தொடங்கப்படும் என நாடாளுமன்றத்தில் விமான போக்குவரத்து அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், தூத்துக்குடி ஆகிய விமான நிலையங்களை மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.